Thursday, August 21, 2014

உயிரை பலிவாங்கும் "எபோலோ" வைரஸ்!!

10:32 PM Posted by Unknown No comments
(விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே இந்த பதிவு இடப்படுகிறது)








பன்றி காய்ச்சல் உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் உலகை உலுக்க வந்திருக்கிறது.அதுதான் எபோலா எனும் உயிர்கொல்லி வைரஸ்.

"காற்றின் மூலம் பரவாது"

எபோலா என்பது மனிதனின் இரத்த அணுக்களை தாக்கும் ஒருவித கொடிய வைரஸ் கிருமி. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது எனினும் வியர்வை, எச்சில், இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் அனைத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும்.

"எபோலாவை குணப்படுத்த முடியாது"

எபோலா வைரஸ் தாக்கப்பட்ட நபரை வெகு விரைவாக பலமியக்க செய்யும். இந்த வைரஸ் கிருமியை குணப்படுத்த முடியாது.
நோயின் அறிகுறிகள்: எபோலா வைரஸ் தாக்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாயிற்று வலி, வாந்தி மற்றும் சில சமயங்களில் இரத்தப் போக்கும் ஏற்படும்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

  • கைகளை அவ்வப்போது சோப்பை கொண்டு நன்றாக கழுவவும்.
  • வெளிப்புற உணவுகளை தவிருங்கள். வீட்டிலேயே சுகாதாரமாக தயார் செய்து உண்ணுங்கள்.
  • வீட்டை சுத்தமாகவும், சூரிய வெளிச்சம் அனுமதிக்குமாறும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
தாக்கினால் என்ன செய்வது?

உடனடியாக தலைமை மருத்துவமனையை நாடுங்கள்.
இந்த செய்தியை படித்து அறிந்துகொள்வதோடு நிற்காமல் உமக்கு தெரிந்த அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆசிரியர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தவறாமல் சொல்லுங்கள். உயிர்பலி வாங்கும் வைரஸ் அரக்கனிடம் இருந்து நாட்டை காப்பாற்ற உதவியாய் இருங்கள்..

0 comments:

Post a Comment